வணக்கம்
மத்திய அரசுக்கு , நெருக்கடியை தரும் , அணு ஆயுத ஒப்பந்தத்தைப் பற்றி என் கருத்துகளைச் சொல்கிறேன் .
ரஷ்யாவில் ' கம்யுனிசம் ' வீழ்ந்ததும் , ரஷ்யாவின் வல்லரசு தகுதி குறைந்ததும் காலத்தின் மாற்றங்க்ள் ;கம்யுனிச ஆட்சிகளின் தவறால் ஏற்பட்டவை .
அந்த ரஷ்ய நட்புக்கு , நாம் கொடுத்த விலையே , அமெரிக்காவுடனான விரோதமும் , அணு ஆயுத முன்னேற்றத்தில் பங்கேற்காத நிலைமையும் .
இது முந்தைய நிலை . முடிந்த சரித்திரம்.
தற்போதைய நிலைமைக்கு வருவோம் . முதன் முதலாய் , அமெரிக்க, இந்திய அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்படவுள்ளது .இடது சாரிகள் , அரசையும் கவிழ்ப்போம் என மிரட்டுகிறார்கள் .அவர்களது , அடையாளத்தை உறுதிப்படுத்தவும் , நாங்களும் இருக்கிறோம் எனக் காட்டவும்தான் , இந்த எதிர்ப்புவாதங்கள் எழுகின்றன .
இந்த அணு ஆயுத ஒப்ப்தந்தால் எழும் பயன்கள் என்ன ॥?நமக்குத் தேவையான அணு ஆயுத உலை , ( Nuclear Reactors ) , அணு ஆயுத தாதுப் பொருள் ( uranium )., போன்றவை , தாராளமாகக் கிடைக்கும் .அதைக் கொண்டு , மின் உற்பத்தியைப் பெருக்கலாம் ; ஏற்கனவே , இயங்கிக் கொண்டிருக்கும் . . .அணு உலைகளையும் தடையின்றி இயங்க வைக்கலாம் . இவ்விரண்டும்தான் , மிக முக்கியமான பயன்பாடுகள் . ஏன் ॥? இவை முக்கியம் எனச் சொல்கிறேன் .
என்னதான் தனித்துவம் , தன்னிட்சையான , அணு ஆயுத சக்தி எனப் பேசினாலும் , நம்மிடையே தேவையான தாதுப் பொருள் ( uranium ) இல்லை , வெளியில் வாங்கினாலும் , யாரும் கொடுக்கத் தயாரில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை .
இயங்கிக்கொண்டிருக்கும் உலைகள் ,இயங்காமலே போகும் நிலையில் இருக்கின்றன என்பது வெளியில் தெரியாது .இதை , அமெரிக்கா கொடுக்கத் தயாராய் இருக்கிறது . சில கட்டுப்பாடுகளோடு .
அவை என்ன எனப் பார்ப்போம் .
அணு ஆயுதச் சோதனை நடத்தக் கூடாது .அணு ஆயுதத் தாதுப் பொருட்களை , வேறு அணு ஆயுதச் சோதனைகளுக்கோ , பயன்பாடுகளுக்கோ பயன்படுத்தக் கூடாது . மீறி , நடத்தினால் , அணு உலைகளை , தாதுப் பொருளை திருப்பித் தரவேண்டும்.இவைதான் ,முக்கிய ஷரத்துக்கள் .இதைச் சற்று அலசுவோமா...?
NPT - ஓப்பத்தந்தில் கையெழுத்திடாவிட்டாலும் , மீறி ,நாங்கள் அணு ஆயுத உலை , தாதுப் பொருளைத் தருவதால் , அணு ஆயுதச் சோதனை நடத்தக் கூடாது என்கிறது யு.எஸ் . .
இதுவே , நாம் ஒரு அணு ஆயுதச் சக்தி என வெளிப்படையாக ஒப்புக் கொண்ட நிலைமைதான் . நமக்கு , பெரிதான வெற்றிதான் .
இரண்டாவது , கம்யுனிசம் என வாய் கிழியப் பேசும் இடது சாரிகளை , இரண்டாம் சூப்பர் பவராக நிற்கும் , ரஷ்யாவை இதே கட்டுப்பாட்டுகள் இல்லாமல் நம்முடன் ஒப்பந்தம் செய்யச் சொல்லுங்களேன் . .? நடக்காது . ஏனென்றால் , எந்த அணு ஆயுத சக்தியுள்ள நாடும் , இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்கத்தான் செய்யும் ,
நாம் , நம்முடைய சாதனைகளைப் பற்றி பெருமையடையும் அதே நேரத்தில் , நம்மிடமுள்ள குறைபாடுகளையும் ( limitations ) ஏற்கத்தான் வேண்டும் .
மாறியுள்ள உலகச் சந்தையில் , வலிமைகளில் , தீவிரவாத தடுப்புகளில் , அமெரிக்காதான் முன்னனியில் நிற்கிறது . அவர்களுக்கு , ஒரே கோட்பாடுதான் . ஒன்று அவர்களுடன் இருக்கிறோம் ; இல்லை , எதிர் அணியில் இருக்கிறோம் என்பதுதான் .!
அந்த வகையில் , ஒட்டு வாங்கவும் , ஒட்டு வங்கிக்காகவும் , நம் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளாமல் , அமெரிக்காவுடன் சேர்வதே நமக்கு நல்லது .நாம் அணு ஆயுத சோதனை நடத்த முடியாதே எனக் கேட்டால் , அது தேவையே இல்லை எனத்தான் சொல்ல வேண்டும் .
இது வரை , ஜப்பானில் மட்டும்தான் அணு ஆயுதம் பிரயோகிக்க்ப் பட்டிருக்கிறது . மீதமெல்லாம் , வெற்றுச் சோதனைகள்தான் . அதன் அழிவும் , பேரழிவும் உலகம்றிந்தது . பாகிஸ்தானின் மீது , ஒரு முறை பயன்ப்டுத்தினால் , பாகிஸ்தானே இல்லாமல் போய்விடும் என்பது உண்மை . இந்தியா மீது பாகிஸ்தான் பயன்படுத்தினால் , வட இந்தியாவே காணாமல் போய்விடும் என்பதும் உண்மை .
பிறரைப் பயன்படுத்தும் நோக்கத்திலிருந்து , தடுக்க வைக்கும் , தற்காப்பான தற்போதைய அணு ஆயுத சக்தியே நமக்கும் , பாகிஸ்தானிற்கும் போதும் .
ஆக்கச் சக்திகளுக்கு பயன்படுத்த முயல்வோம் . முன்னேறுவோம் . நெடு நோக்குப் பார்வையோடு , இவ் ஒப்பந்தத்தை செயலாக்க முயலும் , பிரதமர் மன்மோகன் சிங் மிக்க பாராட்டுக்குரியவர் , நம் நனறிக்குரியவர் . அவரே சொன்னது போல் , நாளைய வரலாறு அவரை பாராட்டத்தான் செய்யும் . நிறைவேறாமல் போனால் , பிறரை இகழத்தான் செய்யும் .
ச. பிரசன்னா
Sunday, October 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment